மனைவி நல வேட்பு நாள்


இல்லாள் அகத்­தி­ருக்க இல்­லா­தது ஒன்­று­மில்லை! ஓவ்­வொரு ஆணும் தனது வாழ்க்­கைத்­து­ணையை நன்­றி­யோடு வாழ்த்த ‘ மனைவி நல வேட்பு நாள்’ என்ற கொண்­டாட்­டத்தை அறி­முகம் செய்­தவர் அருட் தந்தை வேதாத்­திரி மகரிஷி.



உல­கிலே தந்­தையர் தினம், அன்­னையர் தினம், ஆசி­ரியர் தினம், குழந்­தைகள் தினம், காத­லர்கள் தினம், நண்­பர்கள் தினம்,மகளிர் தினம், முதியோர் தினம், ஊன­முற்றோர் தினம், என தனித்­த­னியே கொண்­டாடி மகிழ்­கின்­றனர். சுமங்­கலி பூஜையை கணவன் நல­னுக்­காக மனை­வி­யரும் வேண்­டு­கி­றார்கள். குடும்­பத்­துக்­காக தன்னையே அர்ப்­ப­ணிக்கும் மனை­விக்கு நன்றி சொல்ல வேண்­டாமா? ஓவ்­வொரு ஆகஸ்ட் 30 ஆம் தேதி ‘ மனைவி நல வேட்பு நாள்’ உல­கெங்­கு­முள்ள மன­வ­­ளக்­கலை அன்­பர்­களால் உற்­சா­க­மாகக் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.அருளன்னை லோகாம்பாள் அவர்களின் பிறந்த தினமான ஆகஸ்ட் 30 ம் நாளை 'மனைவி நல வேட்பு விழா வாக  ' அருட்தந்தை  வேதாத்திரி மகரிஷி அவர்கள் உருவாக்கி உள்ளார்கள் .


பெண்­மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்­போதும் கெட்­ட­தில்லை. பெண்­ணி­னத்தை மதிக்­காத தனி மனி­தனோ,சமு­தா­யமோ உயர்­வ­டைந்­த­தாக சரித்­திரம் இல்லை. எந்தச் சமு­தாயம் பெண்­மையை போற்றி அவர்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து வாழ்­கி­றதோ அந்த சமு­தா­ய­ம்தான் அறி­விலும்,ஆன்­மீ­கத்­திலும் சிறப்­புற்று விளங்கும்.


மனை­வியர் தின­மான இந்­நன்­னாளில்* பெற்­றோரை, பிறந்த ஊரை,உற­வு­களை பிரிந்து, உங்­க­ளுக்கு தொண்­டாற்றி, இனி­மை­யாக, இன்­ப­மாக உங்­க­ளுக்­காக தன்­னையே முழு­மை­யாக அர்ப்­ப­ணித்து வாழும் அன்­புக்கும், பாசத்­துக்கும் உரித்­து­டைய மனை­வியை ஒவ்­வொரு கண­வரும் மதித்து, வாழ்த்தி உங்­களின் மாசற்ற அன்­பினால் அவர்­களை நனைத்­தி­டுங்கள்.

No comments