அடிப்படையில் மனித வாழ்க்கை என்பது என்ன?

மனித இனம் தோன்றிய நாளிலிருந்து பல நூறு கோடி மனிதர்கள் பூமியில் பிறந்து, வாழ்ந்து, மடிந்தும் விட்டார்கள். அவர்கள் சாதித்தது என்ன...???



இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் வாழ்ந்தார் என்றும், அலெக்சாண்டர் வாழ்ந்தார் என்றும், சாக்ரடீஸ், பிளேட்டோ,அரிஸ்டாட்டில், ஆர்க்கிமிடிஸ், கான்பூசியஸ் போன்றோர் வாழ்ந்தார்கள் என்றும் படிக்கிறோம்.

ரோமாபுரிப் பேரரசி கிளியோபாட்ரா எட்டு மொழிகள் சரளமாகப் பேசுவாள் என்றும், பாலில் குளித்து அதன்பின் நீரில் குளிப்பாள் என்றும் படிக்கிறோம்.


புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த நியூட்டன், 
தொலைநோக்கியைக் கண்டறிந்த கலிலியோ, 
வானொலியைக் கண்டறிந்த மார்க்கோனி, 
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் (சூரத்தில்) 
வர்த்தகம் செய்ய முதன் முதலில் அனுமதி வழங்கிய முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர்,
தாஜ்மஹாலைக் கட்டிய சாஜகான்,
மராட்டிய சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பிய சிவாஜி,
பிரான்ஸின் சக்கரவர்த்தி நெப்போலியன்,
மாபெரும் ரஷ்ய நாட்டின் ஜார் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த லெனின்,
சர்வாதிகாரமென்றால் இதுதான் என்று உலகுக்கு உணர்த்திய  ஹிட்லர்,
கடந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன்,
மர்மத்தின் பிறப்பிடம் மர்லின் மன்றோ,

இன்னும் ஏராளமான மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்றும் படிக்கிறோம். இவர்கள் கண்டுபிடிப்பாளர்களாகவோ கவிஞர்களாகவோ, போராளிகளாகவோ இன்னும் பல தனித்தன்மை மூலம் உயர்ந்தவர்கள். இவர்கள் பொருளாதார/அதிகார/செல்வாக்கு ரீதியாக  உயர்மட்டத்தில் இருந்தவர்கள். எனவே இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள் என்று நாமாக கற்பனை செய்து கொள்கிறோம்...!!!


உயர்மட்டத்தை அடைய விரும்புகிறோம். அதற்கான குறுக்கு வழிகளைத் தேடுகிறோம்.....!!!


உண்மையில் இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ்ந்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை.....!!!


உலகின் வாழ்ந்த/வாழும் பிரபலங்கள் பலரும் சொகுசு வாழ்க்கை வாழ்வார்களே தவிர மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார்களா என்றால் இல்லையென்றுதான் பதில் கிடைக்கும்


நான்கு நாட்கள் பட்டினி கிடந்த ஒருவன் ஒரு ரொட்டித் துண்டைக் கண்டு அடையும் மகிழ்ச்சி கூட இவர்களிடம் இருக்காது பணம் பதவி இருந்தவர்களாகட்டும் இல்லாதவர்களாகட்டும் நான் படித்த பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நிம்மதியைத் தேடி அலைந்திருக்கிறார்கள். பாசத்திற்காக ஏங்கியிருக்கிறார்கள்


நாம் இன்னும் வாழ்வைப் பற்றியே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, பிறகு எப்படி சாவைப் புரிந்து கொள்ள முடியும் என்றார் கான்பூசியஸ்.


நம்மால் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாதா....???

ஒரே ஒரு முறை வாழப்போகும் இந்த வாழ்க்கை எதற்கு....???

நிலையானது என்று நாமாகவே ஒருசிலவற்றை கற்பனை செய்து கொண்டு, அதைத் தேட ஆரம்பிக்கிறோம். உண்மையில் நிலையானது / நமக்கானது என்று எதுவுமே இல்லை. நம் உயிர் கூட நமக்கானதல்ல என்னும்போது வேறு எதுதான் நமக்கானதாக இருக்க முடியும்.....???


என்றோ ஒருநாள் நான் சாகத்தான் போகிறேன்.என்றோ ஒருநாள் சர்வமும் அழியத்தான் போகிறது. அப்படி இருக்கையில் துன்பத்தையும் கவலைகளையும், மன அழுத்தத்தையும் நமக்குள் வைத்துக்கொண்டு நம் வாழ்க்கையை ஏன் இன்னும் கடினமாக்க வேண்டும்.....???


வாழ்க்கை மிக எளிதானது நாம்தான் அதை கடினமாக்கிக் கொள்கிறோம் உண்மையில் நாம் தேட வேண்டியது என்ன....???


அமைதியையும் மகிழ்ச்சியையும் இவை எங்கே கிடைக்கும்.....???

பிறரிடமிருந்து நிச்சயமாக நமக்குக் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அது நிலைக்காது, ஆக இவை எங்கே கிடைக்கும்....???

நம்மிடம் மட்டும்தான் நம்முடைய அமைதியை, மகிழ்ச்சியை நம்மிடமே தேடி, வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து ருசித்து பூரிப்புடன் வாழ்ந்து பழகி விட்டால் மனிதனாகப் பிறந்த பயனை அடைந்து விடலாம்.


வாழ்நாள் முழுவதும்  மகிழ்ச்சியாக வாழ்ந்தேன் என்பதைத் தவிர என் வாழ்க்கையில் வேறு என்ன சாதிக்கப் போகிறேன்.....???

உங்களுக்குள் மகிழ்ச்சியைத் தேடுங்கள்,
சின்னச் சின்ன மகிழ்ச்சியை உணருங்கள்.
உங்கள் வாழ்க்கையை ஆத்மார்த்தமாக ரசியுங்கள்
அகம் மகிழ்தல் ஆரோக்கியம்.

No comments