படித்ததில் பிடித்தது

 இது தான் நிதர்சணம் 



கூட்டு குடும்பங்கள் அழிந்து பல வருடங்கள் ஆயிற்று பிறந்ததோ படித்ததோ பெற்றோரின் பங்கு ஒரு காரணியே  எதிர்ப்பார்ப்புக்களை குறைத்து கீழே உள்ளது போல வாழ பழகி கொண்டால் வாழ்க்கை ரம்மியமாக இருக்கும் 

இந்த பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் சுவாரசியமா இனிமையா இருக்கும். 


1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள்.


2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம் குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள்.

 உங்ள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள் 


3- விலகியே இருங்கள் உறவுகள் இனிமையா இருக்கும் என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள் சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியா இருங்கள்


4- பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை - சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்ய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிரவேண்டாம் 


5 - காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள் அவற்றை சம்சாரம் அது மின்சாரம் -விசு போல சொல்லி காட்டவேண்டாம் உங்கள் கடமையை செய்தீர்கள் அவ்வளவே 


6 -கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள் தேவைபட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமா இருந்து வாருங்க .அங்கே அதிகம் தங்க வேண்டாம் 


7- எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் முன் உங்கள் மனைவியை - கணவனை விட்டுக்கொடுத்து பேசாதீர்கள் உங்கள் இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்குரல் கொடுங்க


8- அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்கவேண்டாம் சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானபடவேண்டாம்.


அவர்கள் வாழ்வது உங்க வாழ்க்கை போல் போராட்ட வாழ்க்கை இல்லை நவீன கார்போரேட் வாழ்க்கை நீங்கள் 1000 ரூ பெரிதாக நினைத்தவர்கள் அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள் எனவே சூரியனுக்கு டார்ச் அடிக்காதீர்கள் 


9- அதிக பாசம் ஆசை வைத்தால் அது மோசம் அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் உங்க அறிவுரைகளை தவிருங்க


10-உங்களை விட அறிவிலும் திறமை யிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்று கொள்ளுங்கள்



No comments