அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் கால் பயிற்சி


கால்பாதங்களைச் சுழற்றும் போது கெண்டைக்கால் தசைகள் நன்கு இயக்கம் பெற்று இரத்த ஓட்டத்தைச் சீரமைக்கிறது. கெண்டைக்கால் தசைகள் இரண்டாவது இதயம் (Peripheral heart) போல் செயல் படுகிறது.




நரம்புகளை ஊக்குவிக்க, எளியமுறை உடற்பயிற்சியில் கால் பயிற்சி (Foot Reflexology), அக்குபிரஷர் (Acu-pressure) என்ற இரண்டு விதமான பயிற்சிகள் உதவுகின்றன. உடலில் உள்ள நரம்புகளுக்கு ஊக்கம் கொடுத்து, மின்சாரத்தின் ஏற்றத் தாழ்வான ஓட்டத்தைச் (Electrical imbalance) சரி செய்ய இப்பயிற்சிகள் உதவுகின்றன.

உடலில் சுமார் 72,000 நரம்புகள் இருந்து மின்சாரத்தை உடலெங்கும் பரப்பி வருகின்றன. இவை கை, காது, தொப்புள், கால் முதலிய இடங்களில் முடிவு பெறுகின்றன. எல்லா நரம்புகளுமே காலில் முடிவு பெறுவதால் கால் பாதத்தில் அவை முடியும் இடங்களில் உணர்ந்து அழுத்தினால் அதற்குரிய உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு அங்குள்ள குறைகள் நீங்குகின்றன.

காலைத் தூக்கி இடத் தொடையின் மீது வைத்து கைப்பெருவிரல்களால் கால் விரல்களையும், பாதத்தையும் நன்றாக அழுத்தி விட வேண்டும். மெரிடியன் நரம்புகள் வந்து முடிகிற இடம் கால் பாதம்தான். காலில் அங்கங்கே சீவகாந்தத் தேக்கம் இருக்கும். அந்தத் தேக்கத்திலிருந்து மீண்டு வர முடியாதபோது கால் வலி உண்டாகும். அதனால் அந்தத் தேக்கத்திற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். இதற்குப் பாதத்தை அழுத்தி விடுதல் (Foot Reflexology) என்று சொல்வார்கள்.

அது மாத்திரம் அல்லாது காலில் பெருவிரலில் வந்து முடிகிற நரம்பு நேரடியாக பிட்யூட்டரி, பீனியல் வரை இணைத்துக் கொண்டிருக்கின்றது. அதனால் பெருவிரலை நன்றாக அழுத்தி விட வேண்டும். இரண்டாவது மூன்றாவது விரல்களை அழுத்தும்போது கண்களில் உள்ள எல்லா நரம்புகளும், கண்களும் ஊக்கம் பெறுகின்றன. அடுத்த இரண்டு விரல்கள் காது நரம்புகளோடு தொடர்பு கொண்டுள்ளன. அதன் பிறகு கழுத்து, நுரையீரல் என்று எல்லா உறுப்புகளும் படிப்படியாக தொடர்பு கொள்கின்றன.

கால் விரல்களின் கீழே பாதத்தின் மேல் பகுதியை அழுத்துவதால் இதயம், நுரையீரல், குடல், மூளை முதலியவை சுறுசுறுப்புடன் இயங்குகின்றன. கால்கள் பலமடைகின்றன. வயிற்றின் எல்லாப் பகுதிகளிலும் இரத்த ஓட்டம் சீரடைகிறது. கீல்வாதம், நரம்பு வலி குணமடைந்து தவிர்க்கப்படுகின்றன.

காலின் நடுப்பள்ளத்தில் மெதுவாக அழுத்தும்போது வயிற்றில் வலி நீங்குகிறது. கல்லீரல், மண்ணீரல், அட்ரினல், பித்தநீர்ப்பை ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன. குதி காலில் கொடுக்கும் அழுத்தம் உடல் மூட்டுக்களுக்கெல்லாம் பசை உண்டாக்கிக் கொடுக்கிறது.

காலின் உட்புற ஓரத்தை அழுத்தும்போது முதுகுத்தண்டு சீரடைகிறது. வெளிப்புற ஓரத்தை அழுத்தும்போது பெருங்குடல் சீரடைகிறது. இந்தக் கால் அழுத்தப் பயிற்சி உள் உறுப்புகள் அனைத்தையும் செவ்வனே வேலை செய்ய உதவுகிறது. 


உடற்பயிற்சிக்கென தக்க நேரம் ஒதுக்கிக் கொண்டு மெதுவாக இரு பாதங்களையும் அழுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது மனம் அந்த உடற்பயிற்சியிலேயே இருக்க வேண்டும்.

கால் பயிற்சியின் நன்மைகள் :

1. கால்கள் பலமடைகின்றன.
2. கீல்வாதம், கணுக்கால் வீக்கம், முழங்கால்வலி, குடைச்சல், நரம்பு வலி
ஆகியவை குணமடைகின்றன வராமல் தவிர்க்கப்படுகின்றன.
3.சிறுநீரகம் ஊக்குவிக்கப்படுகிறது. 4. இதயம், நுரையீரல், குடல், மூளை, மற்ற
சுரப்பிகள் ஆகியன நரம்பு மூலம் பாதங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன.
பாதங்கள் மற்றும் கால்விரல்கள் அழுத்தப்படுவதால், அவற்றின் இயக்கம்
நரம்புகள் மூலம் ஊக்கப்பட்டு. சுறுசுறுப்புடன் இயங்குகின்றன.

No comments