மௌனம்



யோக சாதனைகளிலேயே சிறந்ததொரு பயனளிக்கும் பயிற்சிமுறை மௌன நோன்பு ஆகும். வாய்ப்பேச்சு இல்லாதிருத்தல் பேசா நோன்பு என்று பொதுவாகக் கருதப்படுகிறது. மௌன நோன்பு என்பதற்கு மேலும் சிறப்பான ஆழமான கருத்தும் உண்டு அது 'மனமடக்கப் பயிற்சி' என்பதாகும். மனத்தைச் சீரமைக்கும் சாதனைக்கு வாய் பேசாதிருத்தல் ஒரு புறச் சடங்கு ஆகும்.



மௌனம் என்பது மனத்தைச் சீரமைக்கும் பயிற்சி அகத்தவமும் அகத்தாய்வும் செய்ய வேண்டும். எப்போதும் ஐம்புலன்கள் மூலம் வெளி உலகப் பொருட்களுடனும், உயிர்களிடமும் தொடர்பு கொண்டே இருக்கிறோம். நாம் பிறந்தது முதல் இன்று வரையில் செய்த செயல்கள், எண்ணங்கள், விளைவுகள் அனைத்தும் சீவகாந்த அலையில் அவ்வப் போது வடிவம், குணம் ஆகியவைகளாகச் சுருங்கி கருமையத்தில் பதிவாகி உள்ளன.

மௌனத்தின்போது மனம் இவற்றை ஒவ்வொன்றாகக் கருமையத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறது. பதிவுகளை ஆராய்ச்சி செய்து தீயவற்றை விட்டுவிட வேண்டும்.

அகத்தாய்வு செய்து நன்மை தரும் எண்ணங்களை வைத்துக் கொண்டு தீமை தரும் எண்ணங்களை விட்டு விட வேண்டும். கருமையத்தைத் தூய்மை செய்கிறோம்.

தவம் செய்வதால் மனம் நுண்ணிய அலைக்குச் சென்று இயற்கை இரகசியங்களை அறிய முடிகிறது. இறைநிலையை அடைய முடிகிறது.

1. தவமும், அகத்தாய்வும் மாறி மாறி நாள் முழுவதும் செய்ய வேண்டும். 1/2 மணி நேரம் தவம், 21/2 மணி நேரம் அகத்தாய்வு என்ற முறையில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திலும் மௌனம் தொடர்ந்து இருக்கவும்.

2. அகத்தாய்வுப் பயிற்சியாக, எண்ணம் ஆராய்தல், ஆசைச் சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் ஆகியவற்றின் பயிற்சி அட்டவணைகளை எடுத்துச் கொண்டு அகத்தாய்வு செய்ய வேண்டும். மனத்தில் களங்கங்களையெல்லாம் போக்கி மனத்தூய்மை, வினைத்தூய்மை பெறுதல் வேண்டும்.

3.நாம் பிறந்தது முதல் இன்று வரை நமக்கு நன்மை செய்தவர்கள் ஒவ்வொருவரை யும் நினைத்து, அவர்களை 'வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தி அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

4.நாம் பிறந்தது முதல் இன்று வரை நாம் யார் யாருக்குத் தீமைகள் செய்திரு கிறோமோ, துன்பம் கொடுத்திருக்கிறோமோ, அவர்கள் ஒவ்வொருவரையு நினைத்து, அவர்களிடம் 'என்னை மன்னித்து விடுங்கள்' என்று மானசீகமாக கேட்டு, அவர்களையும் 'வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தி விட வேண்டும்.

5.மேலும், நமக்கு இன்று வரை யார் எல்லாம் தீமை செய்தார்களோ அவர்களைய நாம் மன்னித்து, 'வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துக் கூற வேண்டும்.

6. மௌன காலத்தில் மௌன நிலையிலிருந்து கொண்டு 'உலகம் எப்படி இரு வேண்டும்? நான் எப்படி இருக்க வேண்டும்? குடும்பம் எப்படி, வேண்டும்?' என்று நினைக்கிறபோது, அந்த எண்ணத்திற்குத் திணிவு உண்டாகும்.

7. வாரம் ஒரு நாள் மௌனம் இருப்பது சிறப்பு. ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் நாளாவது மௌனம் இருக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது அதிக நாட்கள் தொடர்ந்து மௌனமாக இருப்பது நல்ல முறையில் கருமையத் தூய்மை செய்ய உதவும்.

8. ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து 1 மணி நேர டைரி எழுத வேண்டும். மனத்தில் வரும் எண்ணங்களை இரண்டாவது கட்டத்தில் அந்தந்த நேரத்தில் எழுதவும். இரவு 8.00 மணிக்கு ஓய்வாக அமர்ந்து, இரண்டாவது கட்டத்தில் உள்ள எண்ணங்களை ஆராய்ந்து, மூன்றாவது கட்டத்தில் முடிவை எழுதவும். இப்பயிற்சி மனத்தூய்மை செய்ய உதவும்.

இறையுணர்வுக்கு மௌனத்தின் அவசியம் :

அகத்தவத்திலே உயிர்மேல் மனம் வைத்து அறிவை அமைதி நிலைக்கு கொண்டு வருவது முதற்செயல் உயிரை உணர்வாய்ப் பெறும் இந்தத் தவமுறையைக் குருவின் மூலமே கற்றுக்கொள்ள வேண்டும்.

பிறகு இதுவரையிலும் அறிவிலே பதிந்துள்ள வினைப் பதிவுகளின் தன்மையுணர்ந்து நலம் விளைக்கும் புதிய முறையிலே திருப்பிப் பழக்கும் முறை அடுத்த தொடர்ச் செயல் ஆன அகத்தாய்வு.

இவற்றை முறையே மனமடக்க ஓர்மைப் பயிற்சி (லயம்) என்றும் அகத்தாய்வு என்றும் கூறுகிறோம்.

இவ்விரு பயிற்சிகளின் போதும் வாய் திறந்து பேசுவது முரண்பாடான செயலாகும். எனவே மௌனமாக இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். முழுநோக்கம் மனமடக்கம் சடங்கு வாய்திறந்து பேசாமை வாய்மூடி பேசாதிருந்து மன ஓர்மைப் பயிற்சியோ அகத்தாய்வோ இயற்றாமலிருந்தால் மௌன நோன்பு என்பது முழுமை யாகாது.

மனிதன் பேசுவது தனது அறிவினை அனுபவங்களைப் பிறர்க்கு எடுத்துக் கூறி மற்றவர்களுக்கும் பயன்பெறச் செய்யவும் தனது தேவைகளைப் பிறர் உணர்ந்து கொண்டு தக்கபடி உதவி செய்யப் பெறுதற்குமேயாம்.

மனச் சீரமைப்புப் பெறாதவன் பேசினால் தவறான பயன்களும் துன்பங்களும் பல்லவா விளையும்? இதனை ஒரு சித்தர் பெருமான் குறிப்பிடுகிறார். சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும் மனமடங்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே

1 வாக்கு மௌனம்
2 கருவி மௌனம்
3 மகா மௌனம்

வாக்கு மௌனம்: வாய் பேசாதிருத்தல் வாக்கு மௌனம்

கருவி மௌனம்: ஞானேந்திரியம், கர்மேந்திரியம் இவைகள் அடக்கமாக
இருப்பது கருவி மௌனம்

மகா மௌனம் வாக்கு மௌனம், கருவி மௌனம் மற்றும் அலைகின்ற
மனத்தை அமைதிப்படுத்தி இறை நிலை உணர்வோடு இருத்தலே மகா மௌனம்

நிலைப்பேறு :
மனம் செம்மை பெறாதவர்கள் பேசுவதால் என்ன பயன் என்று வினவுகிறார் திருவள்ளுவர் கூறும் அறிவுரையையும் இங்கு நினைவு கூர்வோம்.

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்."
தன்முனைப்பை அடக்கி அகண்டாகாரப் பேராற்றலோடு தன்னை இணைத்துக் கொண்டால் இறையருள் சுரந்து இன்பம் ஓங்கும் இல்லையேல் துன்ப இருளில் ஆழ்த்தி விடும் என்பதே இக்கவியின் கருத்தாகும்.

மௌன நோன்பில் மனமடங்கிடத் தற்சோதனையில் ஈடுபடும்போது இறைநிலையில் இயல்புகள் அனைத்தும் அறிவிற்குக் காட்சியாகும். இப்பெரும் பேற்றினை இறை நிலை என்னுள் பேசுகிறது என்றும் உள்ளுணர்வு என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

வாய்ப்பினை வாழ்வில் ஏற்படுத்திக் கொண்டு ஒரு நாள், பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் என்ற அளவில் மெளன நோன்பு ஏற்பதில் மும்மலங்களும் கரைந்து ஆன்மிக அறிவு ஒங்கி வாழ்வில் தெளிவும் அமைதியும், இனிமையும் விளையும் வாரம் ஒரு நாளோ, மாதம் ஒரு நாளோ குறித்துக் கொண்டும் மௌன நோன்பு ஆற்றிப் பிறவிப் பயனை அடையலாம், அருள் ஒளி மிக்க வாழ்வினைப் பெறலாம்

மௌனத்தின் பயன்கள் :
  • புலன் அடக்கம் பெறும்.
  • சீவகாந்தப் பெருக்கம், சீவகாந்தச் செறிவு ஏற்படும்.
  • தவத்தினால் இறைநிலையுணர்வு கிட்டும்.
  • தற்சோதனை செய்ய உதவும்.
  • அறிவாட்சித் திறன் பெருகும்.
  • அயராத விழிப்பு நிலை ஏற்படும்.
  • ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும்.
  • குணநலப்பேறு கிட்டும்.
  • தொண்டு மனப்பான்மை பெருகும்.
  • செயல் விளைவு தத்துவம் விளங்கும்.
  • பிரபஞ்ச இரகசியமும் இயக்க தன்மையும் விளங்கும்.

No comments