உடலைத் தளர்த்துதல் பயிற்சி (Relaxation) :


உடலைத் தளர்த்துதல் பயிற்சியைத் தவறாமல் செய்ய வேண்டியது அவசியம் ஏனெனில், உடலிலுள்ள எல்லா உறுப்புகளிலும் செல்களிலும் சில காந்த ஆற்றல் பாய்ந்து நிரம்பி, உடல் சீராக, நலமாக இருக்க இப் பயிற்சி உதவுகிறது.


உடல் உறுப்புகள் அனைத்தும் மிக இலேசாகி, மிதப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இயந்திர வாழ்க்கையில் உடலைத் தளர்த்துதல் பயிற்சியைச் செய்கின்ற போது உடலும் மனமும் இலேசாகி அமைதி அடைகின்றன. அதிக உயர் இரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவற்றைத் தடுக்க இப்பயிற்சி மிகவும் உதவுகிறது உடல் நன்கு ஓய்வு பெறுகிறது.

தோட்டத்திலுள்ள செடிகளுக்குத் தண்ணீரைப் பாய்ச்சும்போது, ஒரு குழாய் வழியாக நீரைக் குவித்து, ஒவ்வொரு செடியின் மீதும் வேகமாக நீர் விழுமாறு பாய்ச்சுகிறோம். அதனால் நிறைய நீர் போய்ச் சேருகிறது. அதைப்போல, சீவகாந்தத்தை மனத்தில் குவித்து உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியாக ஒருமுகமாகப் பாய்ச்சுகிறோம். நிறைய சீவகாந்த ஆற்றல் உடலுறுப்புகளுக்குப் போய்ச் சேருகிறது அந்தந்த உடல் உறுப்புகளில் உள்ள அணு அடுக்குகள் சீரடைகின்றன. உடல் முழுவதும் நலமடைகிறது.

உடலை 10 பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு உடலைத் தளர்த்துகிறோம். அவை
(1) பாதம்,(2) கெண்டைக்கால்,
(3) முழங்கால்,(4) தொடை,
(5) இடுப்பு,(6) வயிறு,
(7) மார்பு, (8) கைகள்,
(9) கழுத்து, (10) தலை.

இவ்வாறு கீழிருந்து தலை வரை ஒவ்வொரு உறுப்புக்கும் காந்தத்தைப் பாய்ச்சுகிறோம்.

எளியமுறை உடற்பயிற்சியில் கைப்பயிற்சியிலிருந்து அக்கு பிரசர் வரை இரத் ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் ஆகியவற்றைச் சீராக்கிய பின் முடிவாக, காந்த ஓட்டத்தையும் நன்கு சீராக்கும் பயிற்சிதான் உடல் தளர்த்தல் பயிற்சி. இது ஒரு காந்தக் குளியல் குளத்து நீரில் உடல் மூழ்கி இலேசாக மிதப்பது போல், காந்தக் களத்தில் உடல் முழுவதும் மூழ்கி எங்கும் தடையில்லாது சீவகாந்தம் உடலில் நிரம்பி இப்பயிற்சி வழி செய்கிறது.

ஒவ்வொரு உறுப்பையும் நினைத்து உடல் தளர்த்தும்போது அந்த உறுப்பில் - இரத்தக் குழாயை நினைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குழாயில் இரத்தம் சீராக ஓடுவதை மனத்தில் காட்சியாக நினைக்கிறோம். வெப்ப ஓட்டம் சீராக ஓடுகிறது. காற்றோட்டம் சீராக ஓடுகிறது. உயிரோட்டம் சீராக ஓடுகிறது. காந்த ஓட்டம் சீராக ஓடுகிறது செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. உள் உறுப்புகள் வலிமை அடைகின்றன. நன்கு ஓய்வு பெறுகின்றன. இவ்வாறு மனத்தைக் குவித்துச் செய்யும்போது காந்த ஆற்றல் நன்கு அந்த உறுப்பில் பரவி, நிரம்பி அணு அடுக்குகளைச் சீராக்குகிறது.

இது ஓர் அற்புதமான பயிற்சி. இரவு படுக்கும்போது கூட இப்பயிற்சியைச் செய்யலாம். நன்கு ஓய்வு கிடைக்கிறது.

உடலைத் தளர்த்துதல் பயிற்சியின் நன்மைகள் :

1. உயர் இரத்த அழுத்தம் குறைகிறது.
2. ஒழுங்காகத் தொடர்ந்து பயின்றால் இதயப் பாதிப்பு நேராமல் தடுக்கிறது.
3. உடலிலும், மனத்திலும் ஏற்படும் அழுத்தம் குறைந்து அமைதி உண்டாகிறது. 4.உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது. 5. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது.


No comments