உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியக் குறிப்புகள்

 உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியக் குறிப்புகள் : -


  • வெறும் வயிற்றோடு காலையில் ஒருவேளை மட்டும் செய்தால் போதும்.
  • பயிற்சிகளில் வேக உணர்வுக்கு இடம் கொடுக்காமல், அசைவுகள் நிதானமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.
  • திட உணவு சாப்பிட்டு இருந்தால் சாப்பிட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு செய்யலாம்.
  • இருதய நோய் உள்ளவர்கள் மனவளக்கலை ஆசிரியரின் ஆலோசனையைப் பெற்றுக் கொண்டு செய்ய வேண்டும்.
  • கைப்பயிற்சியின் ஆறாம் நிலை, கண் பயிற்சி முழுவதும் மற்றும் மகராசனம் இரண்டாம் பகுதியின் கடைசி நிலை இவைகளைத் தவிர, அனைத்துப் பயிற்சிகளையும் கண்கள் மூடிய நிலையில் உடலில் அசைவு எங்கு நடைபெறுகிறதோ அங்கு மனதைச் செலுத்திச் செய்ய வேண்டும்.
  • ஏதேனும் அறுவைச் சிகிச்சை நடந்திருந்தால் மூன்று மாதம் கழித்து ஆசிரியரின் ஆலோசனை பெற்றுத் தொடங்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்தல் கூடாது.
  • உடற்பயிற்சிகள் அனைத்தும் விரிப்பின் மீதுதான் செய்ய வேண்டும்.

No comments