தியானப் பயிற்சிகளின் பலன்கள்

  1. மன அமைதி, மன விரிவு, மன நிறைவு, சகிப்புத் தன்மை கிட்டும். 
  2. ஐந்து புலன்கள் மூலம் செலவாகிற உயிர் ஆற்றல் சேமிக்கப்படும்.
  3. மனதின் ஓர்மைத் தன்மை (Concentration), ஏற்புத் திறன் (Receptivity), அறிவுக் கூர்மை (Intelligence) மற்றும் நினைவுத் திறன் (Memory Power) கூடும். 
  4. நாளமில்லாச் சுரப்பிகள் (பிட்யூட்டரி, பீனியல்) இயக்கங்கள் சீரடைகின்றன. மன ஆற்றலும், ஆழ்ந்த அமைதியும் கிட்டும். 
  5. மன இறுக்கம், மனச் சோர்வு சரியாகின்றன. இரத்த அழுத்தம் சீராகிறது.
  6. தேவையற்ற குழப்பம், பயம் போன்றவற்றில் இருந்து விடுபட முடியும். முகம் பொலிவு பெறும்.
  7. நிர்வாகத் திறன், முடிவெடுக்கும் திறன், செயல்திறன் கூடுகின்றன.
  8. மூளைப் பகுதியில் உள்ள அனைத்து சிற்றறைகளும் இயக்கம் பெறுகின்றன. பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு கொள்ளும் ஆற்றலும் உள்ளுணர்வும் (Intuition) ஓங்கும்.
  9. எண்ணங்களை ஆராயவும், அகத்தாய்வு செய்யவும் உதவும்.
  10. சாந்தி தவத்தினால், தியானத்தில் பெற்ற சக்தி உடல் ஆற்றலாகவும், மன ஆற்றலாகவும் மாற்றமடைகிறது.
  11. மாணவர்களுக்குச் செயல் திறனும், நினைவாற்றலும் கூடுவதால் அதிக மதிப்பெண்கள் பெற உதவும். நல்வாழ்வுக்குத் தேவையான நல் ஒழுக்க பழக்கங்களைக் கற்று அதன்படி வாழ உதவும்.

குறிப்பு:

  1. தியானப் பயிற்சிகளை மனவளக்கலை ஆசிரியர்கள் மூலம் மட்டுமே கற்றுச் செய்து வரவேண்டும். யாருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது.
  2. தியானப் பயிற்சியை காலையிலும், மாலையிலும் குறைந்தது பத்து நிமிடம் செய்ய வேண்டும். இருபது நிமிடத்திற்கு மேல் செய்ய வேண்டாம்.
  3. தவத்தை மனவளக்கலை ஆசிரியர் வழிகாட்டிய காலங்களில்  செய்து வர வேண்டும். இது மிக மிக முக்கியம்.
  4. பெண்கள் மாதவிலக்கு காலங்களில் சாந்தி தவம் மட்டுமே செய்ய வேண்டும்.
  5. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தவறான பழக்கங்களை விட்டுவிடல் வேண்டும்.

No comments