மனவளக்கலை எளிய முறை யோகப் பயிற்சிகள்

நாம் ஒவ்வொருமே வாழ்வில் வெற்றி பெற விரும்புகிறோம். வெற்றி பெறுவதற்கான முதல் அடிப்படை தகுதி நல்ல உடல் நலமும், மனவளமுமே ஆகும்.


 உடல் மனநலக் குறைபாடுகள் வெற்றி பெறத் தடையாக இருப்பதோடு மேலும் துன்பத்திற்குக் காரணமாகவும் அமைந்து விடுகிறது. 
துன்பங்களைப் போக்கி இன்பங்களைக் கூட்டிக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வாழ்க்கைக் கல்வியே மனவளக்கலை ஆகும். 
இதில்

  • உடல் நலம் பேண -: எளிய முறை உடற்பயிற்சிகள் (Simplified Physical                                                          Exercises)
  • மனவளம் பெருக : எளிய முறை தியானப் பயிற்சிகள் (Simplified Meditation                                                Practices) 
  • உயிராற்றல் பெருக : எளிய முறை காயகல்ப பயிற்சிகள் (Simplified                                                                Kayakalpa Exercises) 
  • உயர்ந்த பண்புகளும் : எளிய முறை அகத்தாய்வு பயிற்சிகள் குண                                                                  நலன்க ளும் பெற (Simplified Introspection Courses)
  • வாழ்வில் முழுமை பெற : இறைஞான விளக்கங்கள்

உடல் நலம் பேண எளிய முறை உடற்பயிற்சிகள் உடற்பயிற்சியின் அவசியம் : பஞ்சபூதக் கூட்டால் ஆகிய மனித உடலில் இரத்தம், வெப்பம், காற்று, உயிர் ஆகிய நான்கும் உடல் முழுதும் சுழன்று ஓடி இயங்குகின்றன. இவற்றின் ஓட்டங்களில் ஏற்படும் தடையோ, தேக்கமோ, குழப்பமோ வலியாக, நோயாக மாறுகிறது. எனவே, இந்த ஓட்டங்களைச் சீராக வைத்துக் கொள்ள முறையான உடற்பயிற்சி அவசியமாகிறது. 

மனவளக்கலை உடற்பயிற்சியின் சிறப்புகள் : -

  • இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கேற்றவாறு மருத்துவ ரீதியாக வடிவமைக்கப்பட்டது.
  • இப்பயிற்சிகளின் மூலம் நமது உடலிலுள்ள இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் சீராகின்றன.
  • நமது உடலில் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையுள்ள அனைத்து உள்ளுறுப்புகளும் ஆரோக்கியம் பெறுகின்றன. 
  • நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கம் சீரடைவதால் உடல் நலத்தோடு, மனவளமும் உயர்வடைகிறது. நோய்கள் படிப்படியாக விலகுகின்றன. 
  • நோய் எதிர்ப்புச் சக்தி பெருகுகிறது. கடுமையான நோய்கள் கூட தீவிரம் அடையாமல் தடுத்துக் கொள்ள உதவும். 
  • உடலை வருத்தாமல் குறைந்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பயிற்சிகள் எல்லாக் கால நிலைகளுக்கும் ஏற்றது.
  • ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகச் சுலபமாகச் செய்ய முடியும்.


No comments