ஏகபாத ஆசனம்

 ஏகபாத ஆசனம் 



செயல்முறை

1. நேராக நிற்கவும். 

2. இடக் காலை கைகளின் உதவியால் தூக்கி வலத் தொடையின் உள்புறத்தில் வைக்கவும் கால் விரல்கள் கீழ் நோக்கி இருத்தல் வேண்டும். 

3. மூச்சை இழுத்துக் கொண்டே இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பிய நிலையில் வைக்கவும். பிறகு மூச்சை விடவும்.

4. அசையாமல் ஐந்து இயல்பான மூச்சு காலம் வரை நிற்கவும். 

5. பின்னர் நிலை ஒன்றுக்குத் திரும்பவும். 

6. இதேபோன்று வலக் காலுக்குச் செய்யவும்.

நன்மைகள்

1. மன ஒருமைப்பாடும், திட சிந்தனையும் உண்டாகும்.

2. வாதநோய், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்கள் குணமாகும். 

No comments