ஆசிரியர் தினம்


டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை தான் நாம் அனைவரும் வருடா வருடம் செப்டம்பர் 05-ஆம் தேதியன்று மிக விமர்சையாக மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் தினத்தினை கொண்டாடி வருகிறார்கள். 


டாக்டர் ராதாகிருஷ்ணன் தமது வாழ்நாள் முழுவதும் நல்ல ஆசிரியராக மாணவர்கள் அனைவருக்கும் நல்ல வழிகாட்டியாக விளங்கியவர். 

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 05 அன்று திருத்தணி மாவட்டத்தின் பக்கத்திலுள்ள சர்வபள்ளி எனும் இடத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ஆவர்.

ராதாகிருஷ்ணன் இளங்கலை துறையில் தத்துவத்தை முதல் பாட பகுதியாக தேர்வு செய்து பி.ஏ (BA) பட்டத்தை பெற்றார். 

அதனை அடுத்து முதுகலை துறையில் எம். ஏ (MA) பட்டத்தினையும் பெற்றார்.

ஆசிரியர் பணி கட்டுரை: சென்னை மாவட்டத்தில் அமைவிடம் பெற்ற பிரிசிடென்சி கல்லூரியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய முதல் ஆசிரியர் பணியினை தொடங்கினார். இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர் , மாதவர், போன்றவர்களின் வர்ணனை கவிதைகளையும் கற்றுக்கொண்டார்.

ராதாகிருஷ்ணன் இது மட்டுமல்லாமல், பல்வேறு மத வகைகளில் புத்த மத மற்றும் ஜெயின் மதத்தில் உள்ள தத்துவம், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ,  ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றவர்கள் எழுதிய தத்துவத்தினையும் கற்று தேர்ந்து, அதனுடைய சிறப்பினை நமது நாட்டிற்கு வெளிப்படுத்தியவர்.

ராதாகிருஷ்ணன் மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக 1918-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு கல்கத்தா பல்கலைக்கழகத்தில், 

தத்துவப் பேராசிரியராக 1921-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார். 1923-ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய “இந்திய தத்துவம்” எனும் நூல் வெளியிடப்பட்டது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் 1931-ஆம் ஆண்டு, ஆந்திர மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்வு செய்யப்பட்டார். அதனையடுத்து 1939ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்து மதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தார். அடுத்து 1946-ல், யுனெஸ்கோவின் தூதுவராக அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய நாடு ஆங்கிலேயரிடம் சுதந்திரம் அடைந்த பிறகு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, 1948-ஆம் ஆண்டு பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராக வேண்டுமென்று  கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் அனைத்து தேவைகளை நிறைவேற்ற, இந்திய நாட்டிற்கு சிறப்பான கல்வித் திட்டத்தை கொண்டு வர, ராதாகிருஷ்ணனின் ஆலோசனைகள்  மிகவும் உதவிகரமாக இருந்தது.

கல்வி சம்பந்தமாக மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுப்படுத்தும் வகையில் செப்டம்பர் 05 அன்று ஆசிரியர் தினம் வருடா வருடம் கொண்டாப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 



No comments