திரிகோணாசனம்

செயல்முறை 


1. இரண்டு கால்களையும் 2 அடி தூரம் இருக்குமாறு அகற்றி நிற்கவும். 

2. இரு கைகளையும் பக்கவாட்டில் மேலே உயர்த்தி தோள்களுக்கு மட்ட மாக வைத்துக் கொள்ளவும். 

3. மூச்சை விட்டுக் கொண்டு இடப் பக்கம் வளைந்து இடக் கை விரல்களை இடப் பாதத்தின் வெளிப் புறத்தை தொடுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருக்கவும். இந்நிலையில் முகமானது உயரத் திருப்பப்பட்டு வலக் கை விரல் நுனியைப் பார்க்க வேண்டும். 

4. பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே உடலை நேராக நிமிர்த்தி பழைய நிலைக்கு வரவேண்டும். 

5. வலக் கை விரல் நுனியால் வலப் பாதத்தின் வெளிப்புறத்தைத் தொடுமாறு வலப்புறமாக வளைய வேண்டும். வளையும் போது மூச்சை விட்டுக் கொண்டே வளைய வேண்டும். இந்நிலையில் சில விநாடிகள் இருந்து மீண்டும் மூச்சை இழுத்துக் கொண்டே நிமிர வேண்டும். 

6. இம்மாதிரி மூன்றிலிருந்து ஆறு தடவைகள் செய்யலாம்.

 நன்மைகள் 

1. முதுகெலும்பு நன்றாக வளைந்து செயல்படுவதால் இளமை யோடு இருக்க உதவுகிறது. 

2. முதுகுத் தசைகள், நரம்புகள் வலுப்படுகின்றன. தொந்தி குறையும்.கழுத்துத் தசையும், கழுத்தெலும்பும் மேன்மையடைகின்றன. 

3. அட்ரீனல் சுரப்பிகள் நன்கு செயல்படும்.


No comments