உத்கடாசனம்

 செயல்முறை 

1. பாதம் இரண்டும் தரையில் நன் றாகப் பதியும்படி மூச்சை வெளி விட்டபடி குத்துக்கால் வைத்து அமர வேண்டும். அமரும் போது புட்டங்கள் தரையில் இருந்து அரைஅடி உயர த்தில் நிலை பெற வேண்டும். 

2. வயிறு தொடையில் இணையாத படி முதுகுத்தண்டை நிமிர்த்தி , தலையை நேராக நிமிர்த்தி, பார்வையை நேராகப் பார்த்து, இரண்டு கைகளையும் நேராக முன்பக்கம் நீட்டி இயல்பான மூச்சில் 1-ல் இருந்து 3 நிமிடம் வரை இருந்த பின் மூச்சை இழுத்துக் கொண்டு எழுந்து நேராக நிற்கவும். 

3. தொடர்ந்து 5 முறை இவ்வாறு செய்ய வேண்டும். 


நன்மைகள்

1. சிறுநீரகம், குதம், ஆசனப்பகுதி, அடிவயிற்று உறுப்புகள்பலம் பெறும். சீராக இயங்கும். 

2. கால் பகுதி வலுப் பெறும்.

3. முழங்கால் ஜவ்வுப்படலம் பலப்படும்.

4. இடுப்புப் பகுதி உறுதி பெறும். 

No comments