சுகாசனம்


 சுகாசனம்




செயல்முறை 

  1. சமமான தரையின் மீது விரிப்பினைப் போட்டு அமர்ந்து கொள்ளவும். 
  2. இடக் காலை மடக்கி இடது குதிகால் பால் குறிக்கு கீழே அமையுமாறு நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 
  3.  பிறகு வலக் காலை மடக்கி இடக் காலின் கெண்டைக் காலில் படியும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். 
  4. முழங்கால்கள் தொடை ஆகியன தரையில் படிந்திருக்க வேண்டும். முதுகு நேராக இருக்க வேண்டும். கைகளை முழங்கால் மேல் சின்முத்திரையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  5.  கண்களை இலேசாக மூடிய வகையில் வைத்துக் கொண்டு புருவ மத்தியில் தியானம் செய்யலாம். 
  6. நாடி சுத்தி, பிராணாயாமம் ஆகியவற்றையும் இந்த ஆசனத்தில் அமர்ந்து செய்யலாம்.

நன்மைகள்

  1. வித்தாற்றல் கெட்டிப்படுகிறது. 
  2. பாலுணர்வு சமன்பாடு அடைகிறது. 
  3. மனம் அமைதி நிலையடைகிறது. 
  4. நினைவாற்றல் ஓங்குகிறது. 5. முகப்பொலிவு அதிகரிக்கிறது.



No comments