பர்வதாசனம்

பர்வதாசனம்

செயல்முறை

  1. பத்மாசனத்தில் உட்கார்ந்து கொள்ளவும்.
  2. பிறகு இரண்டு கைகளின் உதவியுடன் முழங்கால்கள் இரண்டும் தரையில் இருக்கும்படி வைத்துக் கொண்டு பிட்டத்தை உயர்த்தி முழங்காலில் நிற்க வேண்டும்.
  3. பிறகு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி வைத்துக் கொள்ளவும்.
  4. இந்த நிலையில் நாற்பது முதல் அறுபது விநாடி வரை இருக்கலாம்.
  5. மூச்சை இயல்பாக இழுத்து விடலாம்.

குறிப்பு

இதைத் திறம்பட பழக பிறர் உதவியோ அல்லது சுவரின் அணைப்பிலே செய்வது சுலபமாக இருக்கும்.

நன்மைகள்

  1. முழங்கால்கள் உறுதி பெறுகின்றன.
  2. மூச்சு ஓட்டம் சீர்மையடைகிறது.
  3. விலா தசைகள் உறுதி பெறுகின்றன.

No comments