வேதாத்திரி மகரிஷி பதில்கள்
மகரிஷியிடம் அன்பர்கள் பல வினாக்களை கேட்டு ஐயம் தீர்த்து கொள்வர். குருவின் பதில்கள் மிகவும் சுவாரசியமாகவும் சிந்தனை மிக்கதாகவும் இருக்கும்.
நம்மில் பலருக்கும் இங்கே உள்ள விடைகள் நம் மனதில் தற்போதுள்ள ஐயத்திற்கு விடை அளிக்கலாம்.. அப்படிப்பட்ட சில வினா விடைகளை இங்கே காண்போம்.
பயன் பெறுவோம். குருவின் பதில்கள் எளிதாக புரியும்படி இருக்கும். ஏதேனும் புரியாமல் இருந்தால் அன்பர்கள் விவாதித்து தெளிவு பெறலாம்..
வினா:
- சிலர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு மாறாகவும் பயனை அனுபவிக்கின்றனர். இது ஏன்?
மகரிஷியின் விடை:
செயலுக்குதக்க விளைவு என்பது இயற்கை நியதி. இதில் சிறிது கூட தவறு இராது. செயலுக்கும் விளைவுக்கும் இடையே கால நீளம் வேறுபடும்.
மனிதன் ஆயுள் ஒரு எல்லை உடையது. இதனால் எல்லா செயலுக்கும் விளைவை இணைத்து பார்ப்பதில் தவறு ஏற்படுகிறது. ஒரு செயலுக்கு அடுத்த நிமிடமே விளைவு உண்டாகலாம்.
மற்றொரு செயலுக்கு 100 ஆண்டுகள் கழித்து விளைவு வரலாம். ஒரு செயல் அதை செய்தவரிடம் கருவமைப்பாக பதிந்து நான்கு தலைமுறைக்கு பின் விளைவு வரலாம்.
ஆக கணித்து இணைத்து பார்ப்பதில் தவறு இருக்குமே தவிர இயற்கை சட்டத்தில் தவறு இருக்க முடியாது.
வினா:
2. இன்றைய வாழ்க்கையில் கொலை செய்வோர், கற்பழிப்போர், களவு செய்வோர் ஆகியோர் பால் சினம் கொள்ளாமல் வாழ இயலுமா?
மகரிஷியின் விடை:
கற்பழித்தல், திருடுதல் முதலிய குற்றங்கள் செய்பவரை எவ்வாறு ஏற்றுக்கொள்வது, எவ்வாறு அவர் மீது சினம் எழாமல் இருப்பது என்ற கேள்வி எழுந்தது.
ஒவ்வொருவரும் உள்நோக்கி பாருங்கள். நமது ஆயுளிலே தெரிந்த வரையில் எத்தனை குற்றங்களை செய்திருப்போம். அவ்வாறு பல குற்றங்கள் செய்த நிலையிலே,
அதாவது பிடிபடாத குற்றவாளிகளாக ஒவ்வொருவரும் இருக்கும் போதே வேறு ஒருவர் குற்றம் செய்யும்போது ஒத்துப்பர்த்து, அவர்தான் குற்றவாளி என்று எண்ணுவது ஒரு சாதாரண
மனித மனதின் இயல்பு என்றாலும் ஆழ்ந்து சிந்தித்து பார்த்தோமானால் இந்த உண்மைகளைஎல்லாம் உணர்ந்து யார் மீதும் சினம் எழாமல் காக்கும் அளவுக்கு மன விரிவும் அறிவின் உயர்வும் ஏற்படும்.
வினா:
3.காயகல்ப பயிற்சி தினந்தோறும் செய்யவேண்டும் என்கிறீர்களே, ஐயா..! உடல் நிலை சரியில்லாதபோது செய்யலாமா..?
மகரிஷியின் விடை:
தினந்தோறும் காயகல்பம் செய்யவேண்டும் என்று நான் சொன்னபோது சரியாக உள்ள நாட்களைத்தான் (Normal Days) நான் குறிப்பிட்டேன்.
உடல்நிலை பாதிக்கபட்ட நாட்களில் காயகல்ப பயிற்சி செய்ய வேண்டியதில்லை. அசுவினி முத்திரை மட்டும் போடலாம். விரைவில் குணமடைய அது உதவும்.
பழகிவிட்ட பிறகு நினைக்கும் போது 10 தடவை அசுவினி முத்திரை செய்யலாம். உடலுக்கும் நல்லது.; மனதுக்கும் நன்மை பயக்கும்.
வினா:
4.குழந்தைகள் எந்த பாவமும் செய்யாத முன்னம் ஏன் பல துன்பங்களுக்கு உட்படுகின்றன?
மகரிஷியின் விடை:
குழந்தை என்பது பெற்றோர் கர்மங்களின் தொடர் நிகழ்ச்சி என்பதை முதலில் நினைவு கொள்ள வேண்டும். வித்தில் ஏற்பட்ட பதிவு விளைவாக மலரும் இடம் குழந்தைகள் தான்.
பெற்றோர் குழந்தைகள் இவர்களுடைய உடல்கள் தாம் வேறுபட்டனவே தவிர உயிர் வேறுபடவில்லை. கர்மம் வேறுபடவில்லை.
எனவே குழந்தைகள் வருந்துவதற்கு பெற்றோர் மாத்திரம் அல்ல, பல தலைமுறை தாண்டிய பாட்டன் பாட்டிகளும் பொறுப்பாவார்கள்.
வினா:
5.கிரகணம் எப்படி உண்டாகிறது? அந்த நாட்களில் உண்ணா நோன்பு, தியானம் செய்வது சிறப்பு என்று சொல்கிறீர்களே, இது பற்றி தங்கள் கருத்து என்ன?
மகரிஷியின் விடை:
சூரியன் வேகமாக சுற்றிக்கொண்டிருக்கிறது. அப்போது heavier elements எல்லாம் நடு மையத்திற்கு சென்றுவிடும் என்று ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும்.
Particle movement குறைந்தால்தான் ஒன்றோடு ஒன்று நெருங்கி இணைய முடியும்; heavier element ஆக மாறும். அப்படி வரும்போது ஒரு குறிப்பிட்ட இடம் வந்தது என்றால்
அதற்கு மேலே அசைய முடியாமல் அந்த சுழல் வேகமே நின்று போகிறது. சுழல் வேகமே நின்று போனால் “கரு அணு” என்று சொல்லக்கூடிய Nucleus-க்கு இயக்கமே இல்லை.
Nucleus நின்று போய்விட்டால் உடனே அதை சுற்றி வந்து கொண்டே இருக்கும் electron, proton எல்லாம் ஓட ஆரம்பிக்கும். ஓட ஆரம்பித்தால் அதுதான் அணுச்சிதைவு.
அந்த அணுச்சிதைவு ஏற்பட்ட உடனே கரு அணு நின்று போய், அதே போல பக்கத்தில் ஒன்று நின்று போய், இதே மாதிரி கோடான கோடி அணுக்கள் அழிந்தன.
அங்கு இருந்த கரு அணு எல்லாம் வெட்ட வெளியாக, அந்த வெட்ட வெளியை “Black-spot in the Sun” என்று சொல்கிறோம். அதாவது சூரியனில் கரும்புள்ளி என்று தோன்றும் வெட்டவெளி.
சூரியனுடைய இயக்கத்தில் வெட்டவெளி நிற்க முடியாது. அதனால் மையத்தில் ஏற்பட்டபோதும் இரண்டு பக்கமும் பீறிட்டுக்கொண்டு வெளியே வந்து பிரபஞ்சமெல்லாம் கடந்து,
கோடு போல சென்று சுத்த வெளியோடு கலந்து விடுகிறது. அதனால்தான் அந்த கிரகங்களை எல்லாம் spiritual கிரகங்கள், ஆன்மீக கிரகங்கள் என்று சொல்வது.
ராகு-கேது என்றால் இப்போது விஞ்ஞானிகள் சொல்கிறார்களே Black-hole அதுதான் ராகு-கேது. சூரியனின் நடுமையத்திலிருந்து உற்பத்தி ஆகக்கூடிய அந்த Black-hole
இரண்டு பக்கமும் பீறிட்டுக்கொண்டு வந்து எப்போதும் அதை கடந்து கொண்டே இருக்கிறது. அதற்கு நேராக சந்திரன், பூமி, சூரியன் இது மூன்றும் வரும்போது அந்த
மறைவு சரியாக வந்து விடும். ஒவ்வொரு மாதமும் மூன்றும் ஒன்றாகத்தான் வருகின்றன; கிரகணம் வருவது இல்லை. ராகு-கேது என்ற அந்த Black-hole நேரில் வருகின்றபோதுதான்
அந்த மறைவு உண்டாகிறது. உடனே “கிரகணம்” என்று சொல்கிறோம். சூரியனை மறைக்கும்போது நேரடியாக அந்த இடத்தில ராகுவோ கேதுவோ அந்த ஓட்டம் இருக்குமானால்,
அதன் பெயர் “சூரிய கிரகணம்”; அல்லது பூமி வந்து சந்திரனுடைய ஒளியை மறைக்குமேயானால் அது “சூரிய கிரகணம்”. சந்திரனை பூமி மறைக்கும் போது, அதாவது பூரண சந்திரன்
தினத்தில் நடு மையத்தில் பூமி நிற்கும்; அதனால் பூமி சூரியனிலிருந்து வரக்கூடிய வெளிச்சத்தை மறைத்துவிடும். அந்த மறைவு சந்திரன் மேல் படுகின்றது. அதுதான் “சந்திர கிரகணம்”.
அதுவும் ராகு-கேது என்ற Black-hole-க்கு நேரில் வந்தால்தான் அந்த மறைவு தெரியுமே தவிர மற்றபடி மறைப்பது இல்லை. ஆகையினால் ஒவ்வொரு மாதமும் ராகு பிடித்து விட்டது, இது ஒரு
பாம்பு என்று சொல்வார்கள். நீளமாக வருவது எல்லாம் பாம்பு என்று சொல்லிக்கொள்வது நமது வழக்கம்.
Black-hole இதனால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும்போது நம் உடலில் உள்ள ரசாயனம் magnetic force வித்தியாசப்படும். அந்த மாறுதல் ஏற்படும்போது நமது
உணவு செரிமானமாகின்ற முறை குறைவாக இருக்கிறது. அந்த நேரத்தில் தெய்வீக நினைவு அல்லது வேறு எதாவது சங்கற்பம் செய்வது நல்லதே.
அப்படி இல்லாமல் இஷ்டம்போல் சுற்றும்போது உடல் உறவு கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் விளையக் கூடிய குழந்தை கேடுற்ற உடலும் மனமும் உடையதாக இருக்க கூடும் என்பதை நாமே
யூகித்துக் கொள்ளலாம். ஆகவே, இத்தகு விபத்துக்களை தடுப்பதற்காகவே அந்த நாட்களை விரத நாட்களாக ஆக்கி வைத்திருக்கின்றனர்.
கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் உடலினுடைய சக்தி அழிவு இல்லாமல் immunity அப்படியே காப்பாற்றப்படும். கிரகணம் முடிந்து குளிப்பது என்பது எப்பொழுதும் குளிப்பது போல்தான். அப்பொழுது குளிக்காமல் போனால் ஒன்றும் இல்லை. தூய்மை வேண்டும் என்று எடுக்கும்போது எதற்குமே குளித்துவிட்டு செய்வது ஒரு சடங்குதான்.
வினா:
6.குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன், குடலிறக்க நோய் ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் காயகல்ப பயிற்சியை எப்பொழுது மீண்டும் தொடங்கலாம்?
மகரிஷியின் விடை:
ஆபரேஷன் நடந்து 6 மாத காலம் ஆனபிறகுதான் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது கூட ஓஜஸ் மூச்சு போடும்போது சிரமமோ வலியோ தென்பட்டால் மேலும் 3 மாதம் தள்ளி போடலாம்.
சிறிது சிறிதாக ஓஜஸ் மூச்சு இழுத்து பார்த்து வலியில்லாத அளவுக்கு ஆக்கிக் கொள்ளவேண்டும். இந்த முற்பயிற்சி குடல்நிலை தேறுவதற்கும் பயனுள்ளதாக அமையும்.
Post a Comment