மண்டுகாசனம்



 மண்டுகாசனம்

                                                   

செயல்முறை

  1. வஜ்ராசனத்தில் அமர்ந்து கொண்டு இரண்டு கைவிரல் களையும் மூடிக்கொண்டு, இரு கை முட்டிகளையும் கவிழ்த்து எதிரெதிரே சேர்த்து வைத்துக் கொள்ளவும். 
  2.  முட்டிகள் இரண்டையும் தொப்புளை ஒட்டி வைத்துக் கொண்டு, மூச்சை வெளியேற்றியபடி முன்னோக்கிக் குனியவும். பார்வை முன்னோக்கி இருக்க வேண்டும். 
  3.  சிறிது நேரம் இதே நிலையில் இருக்க வேண்டும். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நிமிர வேண்டும்.
  4.  இம்மாதிரி மூன்று அல்லது ஐந்து முறை செய்யவும்.

நன்மைகள்

  1. கணையத்தை ஊக்குவிக்கிறது. இதனால் சர்க்கரை வியாதி குணமாக வாய்ப்புண்டாகிறது. 
  2. வயிறு சார்ந்த நோய்கள் தீர வழியுண்டாகும்.
  3.  இதயம் நல்ல முறையில் செயல்படும்.

No comments