பத்மாசனம்

 பத்மாசனம்

 செயல்முறை


  1. அமர்ந்த நிலையில் கால்கள் இரண்டையும் நீட்டிக் கொள்ளவும். பாதங்களுக்கு இடையே ஒரு அடி இடை வெளி இருக்க வேண்டும்.
  2. இடக் காலை மடக்கிப் பாதத்தை வலத் தொடை மீதும், வலக் காலை மடக்கிப் பாதத்தை இடத் தொடை மீதும் வைக்கவும். இரண்டு குதிகால்களும் அடிவயிற்றைத் தொட்டுக் கொண்டு இருத்தல் வேண்டும்.
  3. தலை, கழுத்து, முதுகுத்தண்டு , ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். கண்கள் அக நோக்காகப் புருவ மையத்தைக் கவனிக்க வேண்டும். 
  4.  கைகள் இரண்டையும் முழங்கால் மூட்டுகளின் மீது சின்முத்திரையில் வைக்கவும்.
  5.  ஐந்து இயல்பான மூச்சு விடும் நேரம் இருந்த பின், முன் நிலைக்கு வரவும்.
  6.  கால்களை மாற்றியமைத்து இதுபோல் செய்யவும்.

நன்மைகள்

  1.  தியானம், பிராணாயாமம், நாடிசுத்தி போன்ற பயிற்சி களுக்கு ஏற்ற ஆசனம்.
  2.  இது மன ஒருமைப்பாட்டிற்குச் சிறந்த ஆசனம். 
  3. முதுகுத்தண்டு நேராக அமைவதால் அடிவயிறு மற்றும் உள்ளுறுப்புகளின் இயக்கம் சீர்படுகிறது.



No comments