ஜானுசீராசனம்
ஜானுசீராசனம்
செயல்முறை
- தண்டாசனத்தில் அமர்ந்து கொண்டு வலக் காலை மடக்கி குதிகால் பால் குறியை ஒட்டி இருக்கும் வகையிலும், பாதம் இடத் தொடையோடு இருக்குமாறும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
- இரு கைகளாலும், இடப் பாதத்தைப் பிடித்துக் கொண்டு
- மூச்சை வெளியே விட்டபடி குனிந்து, தலை முழங்கால் முட்டியின் மீது படுமாறு வைத்துக் கொள்ளவும்.
- ஐந்து அல்லது பத்து விநாடி நேரம் இந்த நிலையில் இருந்த பின் மூச்சை இழுத்துக் கொண்டே கைகளை எடுத்து விட்டு நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும்.
- இதேபோல் அடுத்த காலுக்கும் செய்யவும்.
நன்மைகள்
- வயிற்றுத் தசைகள் வலுப்பெறுகின்றன.
- சீரண உறுப்புகள் மேம்படுகின்றன.
- இடுப்புத் தசைகள் வலுப்பெறுகின்றன.
Post a Comment