சவாசனம்

 சவாசனம் எனும் சாந்தி ஆசனம் 



செயல்முறை

  1. மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். 
  2. கால்களுக்கு இடையே இரண்டு அடி இடைவெளி இருக்க வேண்டும். கால் விரல்கள் வெளிநோக்கி இருக்க வேண்டும். 
  3. கைகள் இரண்டையும் 45டிகிரி வைக்கவும். உள்ளங்கை மேல்நோக்கி இருக்க வேண்டும்.
  4.  கண்களை மூடி இயல்பான மூச்சைக் கவனிக்கவும்.
  5. கால்களில் இருந்து தலைவரை ஒவ்வொரு பகுதியாக தளர்த்தி வரவும்.

நன்மைகள்

  1. உடலும், மனமும் பூரண ஓய்வு பெறுகின்றன.
  2.  உடல் களைப்பு நீங்குகிறது.
  3.  உடற்செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன.
  4.  உறக்கம் வராதவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வரும்.


No comments