முத்திரைகள்

 முத்திரை

நமது உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக்கொண்டு வருவதே முத்திரையாகும். நரம்புகளுடன் சம்மந்தமுள்ள உடல் உறுப்புகளை முத்திரை ஆளுகிறது. பிரபஞ்சமானது பஞ்ச பூதங் களினால் உண்டாக்கப்பட்டது. நம் உடலும், பஞ்ச பூதங்களின் கூட்டே ஆகும். அதைப்போலே நம் உடலில் உள்ள கை விரல்கள் ஐந்து தத்துவங்களாகச் செயல்படுகின்றன.

  1.  கட்டைவிரல் -  நெருப்பு
  2.  ஆள்காட்டி விரல் - காற்று
  3. நடுவிரல் - விண்
  4.  மோதிர விரல் - நிலம்
  5.  சிறு விரல் - நீர்


இவ்வைந்து பூதங்களும் உடலில் சமநிலையில் இருக்கும்போது உடல் ஆரோக்கிய மானதாகவும், நிலை குலையும்போது நோயுள்ளதாகவும் இருக்கிறது. ஐந்து பூதங்களின் ஒருங்கிணைப்பால் உடலின் உள் கட்டுகள், உறுப்புகள், மற்றும் அவைகளின் செயல்பாடுகள் சீரமைக்கப்படு கின்றன.



இம்முத்திரைகளை நிற்கும்போதோ, நடக்கும்போதோ, அமரும்போதோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது அதிக நன்மை பயக்கும். இம்முத்திரைகள் தினந்தோறும் 10 நிமிடம் முதல் 45 நிமிடங்கள் வரை செய்தால் அதிகப் பலன்களை அளிக்கும்.

சின் முத்திரை

No comments