வேதாத்திரி மகரிஷி கால் பயிற்சி!

வேதாத்திரி மகரிஷி கால்  பயிற்சி


நிலை : 1 


12


இரண்டு பாதங்களையும் சுமார் ஒன்றரை அடி இடைவெளியில் அகற்றி வைத்துக் கொண்டு, படம் 1 இல் உள்ளது போல கைகளைப் பின்புறமாக ஊன்றிக் கொள்ளவும். படம் 2 இல் உள்ளது போல இரண்டு கால்களையும் உட்புறமாகப் பெருவிரல்கள் தரையைத் தொடுமளவில்.(எவ்வளவு உட்புறமாகக் குவிக்க இயலுமோ அந்த அளவுக்கு)  உட்புறமாகக் குவிக்கவும். பிறகு மறுபடியும் 1 இல் உள்ளது போல பக்க வாட்டில் பாதங்கள் முழுவதும் தரையைத் தொடுமளவு விரிக்கவும். இது போல 5 முறை செய்யவும்.

நிலை : 2

34


முன்போலவே உட்கார்ந்து கொண்ட நிலையில் இரண்டு பாதங்களையும் சுமார் ஓரடி இடைவெளியில் வைத்துக் கொள்ளவும்.

படம் 3,4 இல் காட்டியுள்ளவாறு ஒரே சமயத்தில் இரண்டு பாதங்களையும் வலதுபுறமாகவும், பின் இடதுபுறமாகவும் பாதங்கள் முழுவதும் பக்கவாட்டில் தரையில்படியுமாறு வலப்புறமும் இடப்புறமும் மாற்றி மாற்றிப் பாதங்களை அசைக்கவும். இதுபோல 5 முறை செய்யவும்.

5



நிலை :3

முன் பயிற்சிகளில் செய்தது போலவே, பாதங்களை ஓரடி இடைவெளியில் வைத்துக் கொள்ளவும். பின்னர் படம் 5இல் காட்டியுள்ளவாறு இரண்டு பாதங்களையும் ஒரே சமயத்தில் வலச்சுழலாக 5 முறை சுற்றவும்.

நிலை : 4

பின், இரண்டு பாதங்களையும் இடச்சுழலாக 5 முறை சுற்றவும். மீண்டும் வலச் சுழலாக 5 முறை சுற்றவும். சுழற்றும்போது பெருவிரலும் சுண்டுவிரலும் தரையில் படுமாறு சுழற்றவும்.

நிலை : 5

6



படம் 6இல் காட்டியுள்ளபடி வலது காலை இடது தொடை மீது வைத்துக் கொள்ளவும். பின் கீழ்க்கண்ட வரிசையில் இரு கைப்பெருவிரல்களை உபயோகித்து மற்ற நான்கு விரல்களும் புறங்கால்கள் மீது படிந்து அழுத்துவதற்கு உதவியாக அமைத்துக் கொண்டு பெருவிரல், அடுத்த இருவிரல்கள், கடைசி இரு விரல்கள் ஆகியவற்றை மெதுவாக அழுத்தவும்.

பின்னர் பாதத்தின் பெருவிரலின் கீழ்ப்பகுதியில் இருந்து சுண்டு விரல் வரை பாதத்திற்கு குறுக்கே அழுத்திக் குதிகால் வரை மேலிருந்து கீழாக எந்த இடத்தையும் விட்டு விடாமல் அழுத்தி விடவும்.

உள்ளங்கால் பகுதியில் மெதுவாக அழுத்தவும். இவ்வாறு அழுத்தும்போது கைப்பெரு விரல்கள் கொண்டு அழுத்த வேண்டும். (மற்ற எட்டு விரல்களும் புறங்காலில் இருக்க வேண்டும். பின் வலதுகால் பாதத்தின் பக்கவாட்டுப் பகுதியை அழுத்தும் போது வலது கை பெரு விரல் பாதத்தின் பெருவிரலின் மீதும் மற்ற நான்கு விரல்கள் பாதத்தின் கீழும் வைத்து இடது கையை அதேபோல வலது கைக்கு கீழே வைத்துப் பாதத்தின் இரு ஓரங்களில் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் மீண்டும் மேலிருந்து கீழாகவும், அழுத்த வேண்டும். பின்பு கணுக்கால் மூட்டைச் சுற்றிலும் இரண்டு பக்கமும் கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும், மீண்டும் கீழிருந்து மேலாகவும் மூன்று முறை அழுத்த வேண்டும். பின்னர் வலது உள்ளங்கை மேலேயும் இடது உள்ளங்கை கீழேயும் உள்ளவாறு வைத்துக் கொண்டு உள்ளங்கையால் கணுக்கால் மூட்டுக்களை வலச்சுற்றாக 3 முறை, இடச் சுற்றாக 3 முறை மீண்டும் வலச் சுற்றாக 3 முறை சுழற்றித் தேய்த்து விடவும். பின்னர் வலது புறங்கையை இடது கால் தொடையில் வைத்து வலது கணுக்காலுக்குச் சற்று மேலே பிடித்துக் கொண்டு மேலிருந்து கீழாக 5 முறை கீழிருந்து மேலாக 5 முறை மீண்டும் மேலிருந்து கீழாக 5 முறை சுற்றவும். பின் குதிகாலிலிருந்து முழங்கால் வரை நன்கு பிடித்து விடவும்,


நிலை : 6


நிலை 5 இல் வலது பாதத்திற்குச் சொல்லப்பட்டது போல இடது பாதத்தை எடுத்துக் கொண்டு அதே போலவே செய்யவும்.

குறிப்பு: வலியோ கூச்சமோ ஏற்பட்டால் அந்தப் பகுதியை அதிகம் அழுத்த வேண்டாம்.


                                                           
8                                         9                                        10



நிலை : 7

படங்கள் 7, 8களில் காட்டியுள்ளபடி வஜ்ராசனத்தில் தொடைகள் சேர்ந்த நிலையில் நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளவும். (வலது கால் பெரு விரலை இடது கால் பெருவிரல் மீது வைத்துக் கொள்ளவும். குதிகால்களை நன்றாக விரித்து வைத்து உள்ளங்கால்களுக்கு இடையில் புட்டத்தைச் வசதியாக வைத்துக் கொள்ளவும்.) மேற்படி 9, 10 படங்களில் காட்டியபடி முதுகின் மேல்புறத்தில் எவ்வளவு மேலே முடியுமோ அந்த உயரத்தில் இரண்டு கைகளின் எட்டு விரல்களையும் வைத்து அழுத்தியபடிக் கீழ்நோக்கி முதுகின் கீழ்க்கடைசி வரை தேய்த்து விடவும். (கைப்பெருவிரல்கள் இரண்டும் முதுகின் பக்கவாட்டிலும் மற்ற எட்டு விரல்களும் முதுகெலும்பைத் தொட்டவாறும்.) ஐந்து முறை மேலிருந்து கீழாக நன்றாக தேய்த்து விடவும்.

நன்மைகள்

1. கால்கள் பலமடைகின்றன.

2. வயிற்றின் எல்லாப் பகுதியிலும் இரத்த ஓட்டம் சீரடைகிறது.

3. கீல்வாதம், கணுக்கால் வீக்கம், முழங்கால் வலி, குடைச்சல், நரம்பு வலி இவை குண மடையும், வராமல் தவிர்க்கப்படும். 

4. முதுகெலும்பை வருடிவிடுவதன் மூலம், அதிலிருந்து புறப்படும் நரம்புகள் ஊக்கி விடப் பட்டு, மூத்திரக்காய் மற்றும் அடிவயிற்றுப் பகுதியின் இயக்கம் நன்கு அமைகிறது. 

5.உடலின் முக்கியமான உட்பகுதிகளான இருதயம், சுவாசப் பைகள், குடல், மூளை சுரப்பிகள் போன்றவற்றுடன் (நரம்பு மூலம்) பாதங்களுக்குத் தொடர்புள்ளது. பாதங்கள் மற்றும் கால் விரல்கள் அழுத்தப்படுவதால் (அவற்றின் இயக்கம் நரம்புகள் மூலபு ஊக்கிவிடப்பட்டு), நன்கு சுறுசுறுப்புடன் இயங்க வகை செய்யப்படுகிறது.


No comments