வக்கராசனம்
வக்கராசனம்
செயல் முறை
- தண்டாசனத்தில் அமரவும்.
- இடக் காலை மடித்து, பாதம் வல முழங்காலைத் தொடும்படி வைக்கவும்.
- மூச்சை இழுத்தபடி வலக் கையை இட முழங்காலுக்கு மேல் கொண்டு வந்து இடக் கணுக்காலைப் பிடிக்க வேண்டும்.
- இடக் கை முதுகின் பின்புறம் தரையில் இருக்க வேண்டும்.
- மூச்சை வெளிவிட்டபடி உடலை இடப்புறம் திரும்பி பின்நோக்கி பார்க்கவும். இயல்பான ஐந்து மூச்சிற்குப் பின் முதல் நிலைக்கு வரவும்.
- இதுபோன்று வலப்பக்கமும் செய்ய வேண்டும்.
நன்மைகள்
- சர்க்கரை நோய் கட்டுப்படும். சிறுநீரக நோய்களுக்கு இது சிறந்த ஆசனம்.
- மலச்சிக்கல், அசீரணம் நீங்கும்.
- முதுகு வலி, இடுப்பு வலி நீங்கும்.
Post a Comment