புஜங்காசனம்
குப்புறப்படுத்த நிலையில் செய்யும் ஆசனங்கள்
புஜங்காசனம்
செயல்முறை
- கவிழ்ந்து படுத்த நிலையில் - கால்கள் சேர்ந்து இருக்க வேண்டும்.
- கைகளை மடக்கி உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் இருபுறத்திலும் வைத்துக் கொள்ளவும்.
- மூச்சை இழுத்துக்கொண்டே தலை, கழுத்து, மார்புப் பகுதியை தொப்புள் வரை மேலே உயர்த்தி பின் நோக்கி வளைக்க வேண்டும். அடி வயிறு தரையில் பதிந்து இருக்க வேண்டும்.
- மூச்சை வெளியே விட்டு ஐந்து இயல்பான மூச்சு நேரம் இருந்து ஆரம்ப நிலைக்குத் திரும்ப வேண்டும்.
நன்மைகள்
- முதுகு எலும்பை பின்நோக்கி வளைப்பதால் கூன் ஏற்படாமல் தடுக்கிறது.
- முதுகு வலி நீங்குகிறது.
- நுரையீரல் மார்பு பகுதிகளின் பலவீனத்தைப் போக்குகிறது.
Post a Comment