சலபாசனம்
சலபாசனம்
செயல்முறை
- கவிழ்ந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
- தாடையை தரையில் படும்படி வைத்து இரண்டு கைகளையும் உடம்போடு ஒட்டி தரையில் வைத்துக் கொள்ளவும்.
- பெருவிரலை உள்வைத்து விரல்களை மடக்கி, ஆதி முத்திரையில் கைகளை தொடைக்கு அடியில் வைத்து மூச்சை இழுத்துக்கொண்டே முழங்கால்கள் மடங்காமல் இரு கால்களையும் முடிந்தவரை மேலே உயர்த்தவும்.
- மூச்சை அடக்கி அந்த நிலையில் சிறிது நேரம் இருக்கவும். பிறகு மூச்சை விட்டபடி முதல் நிலைக்கு வரவும்.
நன்மைகள்
- கல்லீரல், கணையம், சிறுநீர்ப்பை போன்ற உறுப்புகள் வலிமை அடைகின்றன. சிறுநீரகம் நன்கு செயல்படுகிறது.
- இடுப்புத் தசைகள் வலுவடைகின்றன. தொந்தி குறைகிறது.
குறிப்பு
1. கர்ப்பமான பெண்கள், இதய நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதைச் செய்யக் கூடாது.
Post a Comment