தனுராசனம்
தனுராசனம்
செயல்முறை
- கவிழ்ந்து படுத்துக்கொள்ள வேண்டும்.
- இரண்டு கால்களையும், முதுகை நோக்கி பின்னால் மடிக்க வேண்டும்.
- கைகளை முதுகுக்குப் பின்னால் கொண்டு சென்று கணுக்கால்களை பிடிக்க வேண்டும்.
- மூச்சை இழுத்துக்கொண்டே தலை, மார்பு, தொடை மற்றும் கால் பகுதிகளை ஒரு சேர உயர்த்தி உடலை வில் போல் வளைக்கவும்.
- மூச்சை வெளிவிடவும்.
- இந்த நிலையில் ஐந்து இயல்பான மூச்சு நேரம் இருந்து முன் நிலைக்கு வரவும்.
நன்மைகள்
- முதுகெலும்பின் இறுக்கம் தளர்த்தப்பட்டு, வளையும் தன்மை ஏற்படுகிறது. கூன் முதுகு சரிசெய்யப்படுகிறது.
- பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகின்றன.
- வயிற்றின் உள்ளுறுப்புகள் பலம் பெறுகின்றன.
Post a Comment