கோமுகாசனம்

 கோமுகாசனம் 

செயல்முறை 

  1. தண்டாசனத்தில் அமர்ந்து இடக் காலை மடக்கி குதிகாலை ஆசனத்தில் அருகில் வைக்கவும்.
  2. வலக் காலை மடக்கி இடக் கால் முட்டியின் மேல் ஒன்றையொன்றை தொடுமாறு வைக்கவும். 
  3. வலக் கையை மேல் புறம் தூக்கி முதுகுப்புறமாக மடக்கி வைத்துக் கொண்டு இடக் கையை முதுகுப்புறம் கீழ் நோக்கி மடக்கி இரண்டு கைகளின் விரல்களையும் மடக்கி பற்றிக் கொள்ள வேண்டும். 
  4. கழுத்து மற்றும் முதுகு நேராக வைத்துக் கொள்ள வேண்டும். 
  5. ஒருபுறம் இதை ஒரு நிமிடம் செய்யவும்.
  6. இதுபோன்று மற்றொரு புறமும் செய்யவும். 



நன்மைகள்

  1. இது வயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புகளுக்கு நன்மை செய்யும். 
  2. கால்களில் ஏற்படும் பிடிப்புகளை நீக்கும்.
  3. நெஞ்சுப் பகுதி நன்கு விரிவடைந்து மூச்சுக்காற்று ஓட்டம் நன்கு நடைபெறும். - தோள்மூட்டு வலி நீங்கி நல்ல முறையில் செயல்படும்.



No comments