படித்ததில் பிடித்தது

 பல ஆண்டுகளுக்கு முன்பு, குறைந்த படிப்பு அல்லது, படிப்பறிவற்ற பெற்றோர் தங்கள் குழந்தைகளை நல்ல

🔹 மருத்துவர்கள், 

🔹 பொறியாளர்கள்,

🔹 அறிவியலாளர்கள்,

🔹 கணக்காளர்கள்,

🔹 வழக்குரைஞர்கள்,

🔹 ஆசிரியர்கள், அதிகாரிகள்,

🔹 தொழிலதிபர்கள் எனப்படும் GRADE-A குழந்தைகளை உருவாக்கினார்கள்.



இந்த GRADE-A குழந்தைகளில் பலர் பெரும்பாலும், தொடக்கப்பள்ளியிலிருந்து, தாங்களே போராடி, மிகப்பெரிய பதவிகளை அடைந்தனர். அவர்கள் பெரும்பாலும்


👉🏾 தமிழ் மீடியத்தில் படித்தவர்கள்.

👉🏾 வெறுங்காலில் நடந்தனர்.

👉🏾 வயல்கள், காடுகளுக்குச் சென்றனர் அங்கு வேலை பார்த்தனர்.

👉🏾 தண்ணீர் பிடித்தும், விறகு சேகரித்தும் வேலை செய்தனர்.

👉🏾 வாழ்க்கை நடத்த, பள்ளி நேரத்திற்குப் பிறகு வேலை செய்தனர்.


இன்றோ அந்த GRADE-A பெற்றோர் GRADE-B குழந்தைகளை உருவாக்குகின்றனர்.


GRADE A பெற்றோர், GRADE-B குழந்தைகள் மீது

🔹 அதீத கவனம் செலுத்துகின்றனர்

🔹 பாலர் பள்ளி முதல், கல்லூரி வரை, அவர்களது வீட்டுப் பாடம், செய்முறைகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்ய உதவுகின்றனர்.

 🔹 குழந்தைகள், அதிகக் கட்டணம் பெறும் பள்ளிக்குச் செல்ல, தனிக் கார், ஓட்டுனர், வெளிநாட்டில் படிப்பு எனப் பல வசதிகளைத் தருகின்றனர்.

🔹 குழந்தைகளால், காலை முதல் இரவு வரை, மொபைல் பார்க்க முடிகிறது.

🔹 குழந்தைகளை ராஜா, ராணிகளைப் போல, அதிக மதிப்புக் கொடுத்து, வளர்க்கின்றனர்.

🔹 வீட்டில், குழந்தைகள், சிறு வேலைகளைக் கூட செய்வதில்லை.

🔹 உணவு, மேசைக்கு வந்து விடுகிறது.

🔹 சாப்பிட்ட தட்டுகள் கூட பெற்றோராலோ, வேலைக்காரிகளாலோ கழுவப்படுகின்றன. 

🔹 விலையுயர்ந்த துணிமணிகள், போக்குவரத்துச் சாதனங்கள் முயற்சியின்றிக் கிடைக்கின்றன.


ஊரே உங்கள் பேச்சைக் கேட்கும், ஆனால் உங்கள் குழந்தைகள் கேட்க மாட்டார்கள்.


GRADE 'B' க்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகள் 30+ வயதைக் கடந்த பிறகும், சொந்தக்காலில் நிற்க வைக்க உதவுகின்றனர்*.‼ 


நீங்கள் இதில் எந்த வகை❓

🏮 தேவையின்றி உங்கள் குழந்தைகளுக்கு எதையும் வாங்கி கொடுக்காதீர்கள், அத்தியாவசிய பொருள்களை கூட காலம் தாழ்த்தி வாங்கி கொடுங்கள், பணத்தின் அருமை தெரிய வேண்டும். வலியச் சென்று உதவாதீர்கள்.


🏮 வீட்டு வேலைகளை செய்ய சொல்லுங்கள், வீட்டை கூட்டச் சொல்லுங்கள், துணி துவைக்க சொல்லுங்கள்.


🏮 உங்கள் குழந்தைகள் அறிவாளியாக, புத்திசாலியாக, பலசாலியாக வளரட்டும். 


🏮 வாழ்க்கையின் நிதர்சனம், உண்மைகளை நேரடியாகச் சந்தித்து தானாகச் செயல்படும் இளைஞராக வளரட்டும்.

👉🏾 கடினமான நேரங்களை எதிர்கொள்ள

👉🏾 மற்றவர்களை மதிக்க

👉🏾 தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவுங்கள். 

உங்கள் பெற்றோரால் முறைப்படி  வளர்க்கப்பட்ட நீங்கள், உங்கள் குழந்தைகளையும் பயனுள்ள குழந்தைகளாக வளருங்கள்.

No comments