சர்வாங்காசனம்
சர்வாங்காசனம்
செயல்முறை
- மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும்.
- மூச்சை இழுத்தபடி இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து 90டிகிரி மேலே தூக்கவும்.
- முதுகையும், பிட்டத்தையும் உயர்த்திக் கால்களைத் தலைக்கு மேலே உயர்த்தவும்.
- இரு முழங்கைகளையும் தரையில் ஊன்றி உள்ளங்கைகளால் இடுப்பைப் பிடித்து உடம்பும், கால்களும் ஒரே நேர்க் கோட்டில் வரும்படிச் செய்யவும்.
- கண்கள் கால் பெருவிரலைப் பார்க்க வேண்டும்.
- இந்த நிலையில் ஐந்து மூச்சு விடும் நேரம் இருந்து இயல்பு நிலைக்கு வரவும்.
நன்மைகள்
- தலைப்பகுதிக்கு அதிக இரத்தம் பாய்கிறது.
- ஞாபகசக்தி அதிகரிக்கும். மன ஒருமைப்பாடு உண்டாகும்.
- தைராய்டு சுரப்பி சீராக இயங்கும்.
- இரத்த நாளங்கள் சுத்தமடையும்.
Post a Comment