சவாசனம்
சவாசனம் எனும் சாந்தி ஆசனம்
செயல்முறை
- மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும்.
- கால்களுக்கு இடையே இரண்டு அடி இடைவெளி இருக்க வேண்டும். கால் விரல்கள் வெளிநோக்கி இருக்க வேண்டும்.
- கைகள் இரண்டையும் 45டிகிரி வைக்கவும். உள்ளங்கை மேல்நோக்கி இருக்க வேண்டும்.
- கண்களை மூடி இயல்பான மூச்சைக் கவனிக்கவும்.
- கால்களில் இருந்து தலைவரை ஒவ்வொரு பகுதியாக தளர்த்தி வரவும்.
நன்மைகள்
- உடலும், மனமும் பூரண ஓய்வு பெறுகின்றன.
- உடல் களைப்பு நீங்குகிறது.
- உடற்செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன.
- உறக்கம் வராதவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வரும்.
Post a Comment