நாடி சுத்தி
நாடி சுத்தி
செயல்முறை
- பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும்.
- இடக் கையை சின்முத்திரையுடன் இட முழங்காலில் வைத்துக் கொள்ளவும்.
- வலக் கையை நாசிகா முத்திரையில் (ஆள் காட்டி விரல் மற்றும் நடுவிரல் மடக்கி இருத்தல்) வைக்கவும்.
- வலக் கை கட்டை விரலை வல மூக்கில் வைத்து அடைத்துக் கொள்ளவும். இட மூக்கு வழியாகக் காற்றைச் சீராக இழுக்கவும்.
- பிறகு இட மூக்கை மோதிர விரலால் அடைத்துக் கொண்டு வல மூக்கு வழியாகக் காற்றைச் சீராக வெளிவிடவும். பிறகு அதே மூக்கு வழியாகக் காற்றை இழுத்து, இட மூக்கு வழியாக வெளிவிடவும்.
- இது ஒரு சுற்றாகும். உள் மூச்சும், வெளிமூச்சும் சம நேரத்திற்கு இருக்குமாறு பயிற்சி செய்ய வேண்டும். இதே போன்று 5லிருந்து 20 சுற்றுகள் வரை செய்யலாம்.
- விடியற்காலையும், மாலையும் பயிற்சிக்கு உகந்த நேரங்களாகும்.
நன்மைகள்
- உடல் மற்றும் மூளைச் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன.
- நாடி சுத்தியாவதால் தியானம் செய்ய ஏற்றதாகிறது.
- நாடிகள் தூய்மையடையும்போது உடல் இலேசாகிறது. கண்கள் ஒளி பெறுகின்றன. சீரண சக்தி அதிகரிக்கிறது.
Post a Comment