கபாலபதி
கபாலபதி
செயல்முறை
- பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். மூலபந்தம் செய்து கொள்ளவும்.
- இரு மூக்குகள் வழியாக மூச்சைச் சாதாரணமாக உள்ளே இழுக்க வேண்டும். மூச்சை வெளியே விடுதல் மிக வேகமாகவும், கவனமாகவும் செய்ய வேண்டும்.
- மூச்சை வெளியிடும்போது மணிப்பூரகம், சுவாதிஸ்டானம் மற்றும் மூலாதாரச் சக்கரத்தில் தேவையான அளவு வேகத்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது வயிற்றுப் பகுதியானது மேல்நோக்கி வேகமாகச் செல்லும்.
- இந்தப் பிராணாயாமத்தை தினமும் ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் வரை செய்யலாம்.
நன்மைகள்
- நுரையீரல், மூச்சுக் குழாய்கள் சுத்தப்படுத்தப்படுகின்றன.
- மூச்சுத் தொந்தரவு ஆஸ்துமா சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்குகின்றன.
- மூளையில் உள்ள உயிரணுக்களை ஊக்குவிக்கிறது.
- நரம்பு மண்டலம் உறுதிப்படுகிறது.
Post a Comment