மக்கராசனம்
மக்கராசனம்
செயல்முறை
- கவிழ்ந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டு கால்களுக்கு இடையில் ஒரு அடி இடைவெளி விட்டு குதிகால்கள் உள்பக்கமாகவும் விரல் பகுதிகள் வெளிப்பக்கமாகவும் இருக்கும்படி அமைத்துக் கொள்ள வேண்டும்.
- கைகள் இரண்டையும் முகத்திற்கு முன்பாக கொண்டு வந்து இடக் கை மீது, வல உள்ளங்கை இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இடத் தாடைகைகளின் மேல் இருக்குமாறு கண்களை மூடி, படுத்துக் கொள்ளவும்.
- உடலையும், மனத்தையும் தளர்த்திக் கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் பழைய நிலைக்கு வரவும்.
நன்மைகள்
- உடல் உறுப்புகளைத் தளர்த்துவதற்கும், மனதை அமைதிப் படுத்தவும் பயன்படுகிறது.
- மன அழுத்தம், தூக்கமின்மையைப் போக்கவல்லது.
- இதய பலவீனம், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஓய்வைத் தருகிறது.
Post a Comment