பவன முக்தாசனம்
பவன முக்தாசனம்
செயல்முறை
- மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டு முழங்கால்களை மடக்கி உடலோடு ஒட்டி வைத்து கொள்ள வேண்டும்.
- மூச்சை இழுத்துக் கொண்டு இரண்டு கால்களையும் கைகளால் இறுக்கமாகக் கட்டிக் கொள்ளவும் .
- மூச்சை விட்டுக் கொண்டே தலையையும் மார்பையும் உயர்த்தி முகவாய்க் கட்டை முழங்கால்களைத் தொடும்படி செய்ய வேண்டும் .
- இந்த நிலையில் இருந்து ஐந்து மூச்சுகள் விட்ட பின்பு முன்பு இருந்த நிலைக்கு வரவும்.
நன்மைகள்
- வயிற்றுப்பகுதி, நுரையீரல் பகுதிகள் நன்கு சுருங்கி விரிகின்றன. உள்ளுறுப்புகள் பலம்பெறுகின்றன.\
- பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் நீங்கும்.
- குடல் இறக்கம் வராமல் தடுக்கிறது.
Post a Comment